அம்மாபாளையத்தில் சாயபட்டறை அமைக்க எதிர்ப்பு

Loading

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் சாயபட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
சேலம் நவம்பர்.24
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தாவது,
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைப்பதை எதிர்த்தும்,தமிழ்நாட்டில் சாயப்பட்டறைகள் அமைந்துள்ள பகுதிகளில் சுற்று வட்டார மக்கள் அதிகப்படியான நிலம் நீர் காற்று மாசுபாட்டின் காரணமாக கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பிற நோய்களுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது செய்தி ஊடகங்கள் வாயிலாக வைப்பது அடிக்கடி கேள்விப் படுகின்றோம் என்றும், மேலும் அந்தப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிகளில் கொடிய வேதிப்பொருட்கள் கலந்து நீர் முற்றிலுமாக கெட்டுப் போவதால் அன்றாட பயன்பாட்டிற்கும் குடிநீருக்கும் மக்கள் நீரை விலைக்கு வாங்கும் அவல நிலைமை தான் உள்ளது என்பதும், இப்படி ஒரு கொடிய திட்டம் வந்தால் தங்களுக்கும் அதே நிலைமை தான் ஏற்படும் என்றும் தனியார் லாபத்திற்காக தங்கள் உயிரை காவு வாங்கும் இத்திட்டத்தினை கைவிட்டு தங்கள் உடல் நலத்திற்கும் உயிருக்கும் உத்திரவாதம் வழங்கிடுமாறும் , எனவே மாவட்ட நிர்வாகம்
இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் படி தங்களது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
0Shares