ஜவுளிசங்கம் தென்னிந்திய78வதுஅகில இந்தியமாநாடு

Loading

கோவை
இந்திய ஜவுளி சங்கம், தென்னிந்திய பிரிவு சார்பில் கோவையில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது 
இந்திய ஜவுளி சங்கம் தென்னிந்திய பிரிவு, சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
உலகளாவிய ஜவுளிகள், வாய்ப்புகளை வெளிப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ஸ் அண்ட் கலரிஸ்ட்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல முக்கிய அறிவுப் கருத்தரங்குகள்  மற்றும் விவாதங்கள் இடம்பெற்றது.
எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரான சஞ்சய் ஜெயவர்த்தனவேலு  மாநாட்டின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த முக்கியமான ஜவுளித் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டனர்இந்திய ஜவுளி சங்கம் தென்னிந்திய பிரிவு தலைவர் இ.சத்யநாராயணா வரவேற்புரை வழங்கினார். இந்திய ஜவுளி சங்கத்தின் தேசியத் தலைவர் டி.எல். படேல், ஜவுளி துறைக்கு இந்த சங்கத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கே.ராமலிங்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் இந்திய ஜவுளி சங்கத்தின் அடுத்த தலைவர் விஜ், மற்றும் பிரீமியர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர். கே.வி. சீனிவாசன், சிறப்புஉரை வழங்கினார் . ஜவுளி துறையில் மூலப்பொருளான பருத்தி தன்னிறைவு பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது, இருப்பினும், பருத்தி உற்பத்தியில் மகசூல் குறைந்ததால், இந்த சாதக நிலையை இந்தியா மெதுவாக இழந்து வருகிறது என கூறினார். எனவே, விதைகள் மேம்பாடு, உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகியவற்றில் அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் இதுவே இப்போதைய அத்தியாவசியத் தேவையாகும் என்றும், ஜவுளித் தொழில் உற்பத்தித் துறைக்கு அரசாங்கம் இந்த வகையில் உதவ முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து  எல்.எம்.டபிள்யூ தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு அவர்களின் கரங்களால் பள்ளிப்பாளையம் பல்லவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி மற்றும் தேனி எல்.எஸ். மில்ஸ் லிமிடெட் தலைவர் எஸ். மணிவண்ணன் ஆகியோருக்கு ‘தொழில்சார் சிறப்பு விருதுகள்’ வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், கே.எம். நிட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எம். சுப்பிரமணியம் மாநாட்டின் மலரை வெளியிட்டார், அதன் முதல் பிரதியை சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் பெற்றுக்கொண்டார்.
0Shares