பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
![]()
காக்களுர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மை பாரத இயக்கத் திட்டத்தில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், காக்களுர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் வாயிலாக பொது மக்களிடையே பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை19 நவம்பர் 2025 முதல் 10 டிசம்பர் 2025 வரைதொடர்ச்சியாக நடத்தி பொதுமக்களிடையே சுகாதார முன்னேற்றத்தின் மன மாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
நவம்பர் 19 முதல் டிசம்பர் 10 வரையிலான காலத்தில் பொதுமக்களுடன் இணைந்து உலகளாவிய சுகாதாரம், கண்ணியம் மற்றும் சமூக செழிப்புக்கான சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்விதமாக திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளில்மாணவ, மாணவியர்களிடையே தன் சுத்தம், சுகாதார பழக்கவழக்கங்கள், கழிவறையின்முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கழிவறையின் பயன்பாடு குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டுசான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் கழிவறை இல்லாத பயனாளிகளுக்கு கழிவறை அமைத்தல், பயன்பாட்டில் இல்லாத தனிநபர் கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் , பயன்பாட்டில் இல்லாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல். சுகாதாரம் பற்றிய மன மாற்றம் ஏற்படுத்த அனைத்து ஊராட்சி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட நிகழ்ச்சிகள் மக்கள் பங்கேற்புடன் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்களை பார்வையிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுளை ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை, ஜெயக்குமார், உதவி திட்ட அலுவலர் கி.நர்மதா, உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.ஜானகி மற்றும் பி.செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெகதிஸ்வரன் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

