குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குழந்தைகள் தின விழா தொடர்ச்சியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு,  நடைப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சர்வதேச குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து காத்தல் குறித்த தினம் நவம்பர்-18, தேசிய குழந்தைகள் துன்புறுத்தல் தினம் நவம்பர்-19, சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர்-20 ஆகிய தினங்களை அனுசரிக்கும் விதமாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் கையெழுத்து இயக்கம், பிரச்சாரம் மற்றும் பேரணி “குழந்தைகளுக்கான நடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இத்தினத்தில் கையெழுத்து இயக்கமும், ஷெல்டர் ட்ரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் வாயிலாக வீதிநாடகமும், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் வாகன பிரச்சாரமும், சட்டக்கல்லூரி மாணவர்களைக் கொண்டு பேரணி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சென்னை சில்க்ஸ் வரையும் நடத்தப்பட்டது. மேலும், திருத்தணியில் செயல்படும் மருந்தியல் கல்லூரி மாணவியர்களைக்கொண்டு விழிப்புணர்வு ரங்கோலி மற்றும் குழந்தை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அரங்கம் அமைத்து சிறப்பிக்கப்பட்டது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் மற்றும் ஜோன்னா, சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி,திருத்தணியில் செயல்படும் மருந்தியல் கல்வியியல் கல்லூரி முதல்வர் ராதிகா வித்யாசாகர், பாதுகாப்பு அலுவலர் (நிறுவன சாரா) மலர்விழி, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனர் ஸ்டீபன் ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares