துணைமுதலமைச்சர்உதயநிதிஸ்டாலின்24வருகை
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, சுந்தரசோழபுரம் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 24.11.2025 அன்று கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார்,ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி,திருவேற்காடு நகராட்சி ஆணையர் ராமர், ஆவடி மாநகர துணை காவல் ஆணையர் கா.பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

