18அம்சகோரிக்கைவலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
![]()
ஈரோடு
ஈரோட்டில் நில அளவை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்!
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு (TNSOU), 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தலைநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள கடினமான பணி குறியீட்டைக் குறைத்திட வேண்டும்.தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேர்வாணைய முடிவுகளை வெளியிட்டு, நில அளவர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்.
தனியார் ஒப்பந்த முறைக்கு பதிலாக, உரிமம் பெற்ற அளவர்கள் மற்றும் புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்.அதிகாரிகளைப் பாதிக்கும் விதி திருத்தத்தைக் கைவிட வேண்டும். புதிய நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி, NAKSHA பணிகளைச் செம்மைப்படுத்த வேண்டும்.புதிய குறுவட்டங்கள் மற்றும் கோட்டங்களுக்கு உரிய குறுவட்ட அளவர், கோட்ட ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
பட்டா மாறுதல் பணிகளை கைப்பிரதிகள் இன்றி, கணினி மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது
மாவட்டத் தலைவர் ப.கௌரிசங்கர் தலைமையில், ஈரோடு கோட்டத் தலைவர் இரா.சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.நவமணிகண்டன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
தோழமை உரைகளை மாவட்டத் துணைத் தலைவர் இரா.சேது மாதவன், கோபி கோட்ட தலைவர் மா.முத்துராய், TNGEA மாவட்டத் தலைவர் ச.ரமேஷ், TNROA மாவட்டப் பொருளாளர் க.விஜய், TNSFAU மாநில இணைச் செயலாளர் க.நவாஸ் அலி, TNVAOA மாவட்டத் தலைவர் முருகேஷ், TNGEA மாவட்டச் செயலாளர் சா.விஜய மனோகரன் ஆகியோர் வழங்கினர். இவர்களுடன் செந்தில் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

