சேலம்பூம்புகார்விற்பனைநிலையத்தில் தீபத் திருவிழா

Loading

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் தீபத் திருவிழா சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை
சேலம் நவ. 21
 சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற திருக்கார்த்திகை பண்டிகை முன்னிட்டு தீபத் திருவிழா என்ற சிறப்பு கண்காட்சி தனது விற்பனை நிலையத்தில் 17.11.25 முதல் 06.12.25 நடத்தி வருகிறது மத்திய அரசின் அபிவிருத்தி ஆணையம் (கைவினைப் பொருட்கள்) உதவி இயக்குனர் திருமதி டி.ஜி. நீதா 18.11.2025 செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து சிறப்பித்தார்  கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து வகை விளக்குகள் இடம் பெற்றுள்ளன பூம்புகார் உற்பத்தி நிலையங்கள் கும்பகோணம், நாச்சியார் கோவில், மதுரை,வாகைகுளம், ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட 1/2 அடி முதல் 6 அடி வரையில் அன்னம் மற்றும் பிரபை விளக்குகள், 1/2 அடி முதல் 3 வரையில் மலபார் விளக்குகள், ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை, அகல்விளக்குகள், மங்கள தீபம், விநாயகர், முருகர் விளக்குகள்,பாலாடை விளக்குகள், வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள் மற்றும் பலவித வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது விழாக்கால சிறப்பு தளபதியாக 10% வழங்கப்படுகிறது.
விளக்குகள் 3ரூபாய் முதல் 1,11,000 ரூபாய் விலை வரையில் பலவகை விளக்குகள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக விற்பனைக்காகவும் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட விளக்குகளை சேலம் மாவட்ட மக்கள் கார்த்திகை பண்டிகையை  மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு விளக்குகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவுகிறது இவ்வாறு சேலம் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
0Shares