14 வதுஉலககோப்பை ராமச்சந்திரன் திறந்துவைத்தார்

Loading

 

நீலகிரி

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோண்மென்ட் விளையாட்டு மைதானத்தில் அரசு தலைமை கொறடா அவர்கள் 14 வது ஹாக்கி உலக கோப்பை சின்னமான காங்கேயனை திறந்து வைத்து பார்வையிட்டார்

 

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை விளையாட்டு போட்டியினை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பையின் சுற்றுப்பயணத்தினை  வெலிங்டன் கண்டோன்மெண்ட் விளையாட்டு மைதானத்தில், அரசு தலைமைக்கொறடா .கா.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்று, கோப்பையினை திறந்து வைத்து, போட்டியின் சின்னமான காங்கேயனை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 14 ஆவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திலும், மதுரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர் /வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “TROPHY TOUR” (உலகக் கோப்பையின் சுற்றுப்பயணம்) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 10.11.2025 அன்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, 14 ஆவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையானது திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று, இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இந்த “TROPHY TOUR” (உலகக் கோப்பையின் சுற்றுப்பயணம்) பேரணி வாகனத்தினை உபதலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மவுண்டன்ஹோம் பள்ளி, டிம்பர் டாப்ஸ் பள்ளி, புல்மோர்ஸ் பள்ளி, பிருந்தாவன் பள்ளி, ஜோசப் கான்வென்ட் உள்ளிட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இசை மேளத்துடன் வரவேற்று, வெலிங்டன் கண்டோன்மெண்ட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியானது 2001 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டில் இந்தியா இக்கோப்பையினை பெற்று சிறப்பு சேர்த்தது. இந்தியா சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இளையோர் ஆண்கள் ஹாக்கி உலக்கோப்பை போட்டியானது தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் போட்டியாகும். எனவே இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற முன்வர வேண்டும் என அரசு தலைமை கொறடா அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த உலகக்கோப்பையினை முன்னாள் சர்வதேச ஹாக்கி வீரர் திரு.கணேசன் மற்றும் முன்னாள் ஒலிம்பியன் (RACE WALKING) திரு.இர்பான் ஆகியோர்கள் கையில் ஏந்தியபடி கொண்டு வந்து மேடையில் வைத்தனர்.
இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுகரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர் திருமதி இந்திரா, குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares