புதுச்சேரி ரயில்வேமேம்பால பணிகள் மக்கள் அவதி
![]()
புதுச்சேரி நவ-20
புதுச்சேரி ரயில்வே மேம்பாலம் பணிகள் முடியும் வரை சர்விஸ் சாலை எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆய்வு
புதுச்சேரி கடலூர் சாலையில் ஏ.எப்.டி மில் அருகே உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் நீண்டநாட்களாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுமக்கள் முன்வைத்து வந்த கோரிக்கையின் பேரில் ரூ.72 கோடி மதிப்பில் ரோடியார் மில் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் காரணமாக அப்பகுதியில் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையை மனதில் கொண்டு பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் இரயில்வே உதவி பொறியாளர் சக்தி அவர்களுடன் இணைந்து நேரில் சென்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, “குறைந்தபட்சம் ஆம்புலன்ஸ் செல்லும் வழி திறந்திருக்க வேண்டும்” என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திய அவர், பொதுமக்கள் அவசர தேவைக்காக சர்வீஸ் சாலை அவசியம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் AFT நிறுவனத்தின் சொந்தமான இடத்தில் தற்காலிக சர்வீஸ் சாலை அமைத்து வழங்கியுள்ளனர். இதனை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இரயில்வே உதவி பொறியாளர் சக்திவேலுடன் இணைந்து நேரில் பார்வையிட்டார்.
மேலும், சுற்றுப்புற பகுதிகளில் விஷ பாம்பு, பூச்சி கடி போன்ற அபாயங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாணரப்பேட்டை முருகசாமி நகர் மற்றும் AFT கிழக்குப்புறம் உள்ள பழைய மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் AFT அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார். இந்த பணிக்கான JCB இயந்திர செலவினை தானே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
பணிகள் நடைபெற அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சட்ட மன்ற உறுப்பினர் முயற்சியால்
நாளைமுதல் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த ஆய்வில் கிளைச் செயலாளர் ராகேஷ், PT. பன்னீர் செல்வம், ஆறுமுகம், சவேரி, ராஜிவ், மோரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

