சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வு கூட்டம்

Loading

திருவள்ளூரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் நவ 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் அ. சுபேர்கான் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் மகளிர் மற்றும் கிருத்துவ மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் சிறுபான்மையின குழு உறுப்பினர்அ.சுபேர்கான் அவர்களால் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவது தொடர்பாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படுவது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக சிறுபான்மையினர் மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றுவதற்கு சீரிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆணையிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உரிய முறையில் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் சிறுபான்மையினர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1,80,000 லட்சம் மதிப்பிலான காசோலைகளும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.30.000 மதிப்பிலான காசோலைகளும் மற்றும் கிறிஸ்தவ உபதேசியர்கள் மற்றும் பணியாளர் நல வாரிய அட்டை 5 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares