வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிரதிருத்தம்உதவிமையம்

Loading

திருவள்ளூர் நவ 19 :
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி,பொன்னேரி,திருத்தணி,திருவள்ளூர்,பூந்தமல்லி,ஆவடி,மதுரவாயல்,அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 (செவ்வாய், புதன் (ம) வியாழன்) ஆகிய நாட்களில் மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை உதவி மையங்கள் செயல்படஉள்ளது.
வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்புதல் தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், மேற்படி உதவி மையங்களை பயன்படுத்தி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறும், மேலும், மேற்படி மையங்கிலேயே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares