யுனைடெட் பப்ளிக்பள்ளி,சகோதயாபள்ளிபோட்டி

Loading

யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 46 வது கோயம்புத்தூர் சகோதயா பள்ளிக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் 
ஸ்ரீஇராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி சாம்பியன்
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 2025 – 2026 ம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட சி பி எஸ் சி பள்ளி மாணவர்களுக்கான, 46 வது கோயம்புத்தூர் சகோதயா பள்ளிக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. 20 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஸ்ரீஇராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது.
2025 – 2026 ம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட சி பி எஸ் சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான, கோயம்புத்தூர் 46 வது சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் பெரியநாயக்கன்பாளையம் தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 20 அணிகள் பதிவு செய்தன. போட்டிகளை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும் கை குழுக்கி வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும் தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் 3 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் எஸ் வி எம் பள்ளியும், இரண்டாம் போட்டியில் ஸ்ரீவிநாயகா வித்யாலயா பள்ளியும், மூன்றாம் போட்டியில் ரீட்ஸ் உலகப் பள்ளியும் வெற்றி பெற்றன.
இரண்டாம் நாள் நடைபெற்ற 4 போட்டிகளில் முதல் போட்டியில் ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியும், இரண்டாம் போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியும், மூன்றாம் போட்டியில் இராமச்சந்திரா இண்டர்நேஷனல் பள்ளியும், நான்காம் போட்டியில் சி எஸ் அகாடமி பள்ளியும் வெற்றிப் பெற்றன.
மூன்றாம் நாள் நடைபெற்ற 4 போட்டிகளில் முதல் போட்டியில் தி யுனைடெட் பப்ளிக் பள்ளியும், இரண்டாம் போட்டியில் அகரம் பப்ளிக் பள்ளியும், மூன்றாம் போட்டியில் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியும், நான்காம் போட்டியில் ரீட்ஸ் உலகப் பள்ளியும் வெற்றிப் பெற்றன.
நான்காம் நாள் 4 காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியும், இரண்டாம் போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியும், மூன்றாம் போட்டியில் அகரம் பப்ளிக் பள்ளியும், நான்காம் போட்டியில் சி எஸ் அகாடமி பள்ளியும் வெற்றிப் பெற்றன.
ஐந்தாம் நாள் இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் சி எஸ் அகாடமி பள்ளியும், இரண்டாம் போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியும் வெற்றிப் பெற்றன.
இறுதிப் போட்டியில் ஸ்ரீஇராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி வெற்றி வாகை சூடி, சகோதயா கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் சுழல் கோப்பையை வென்று முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு சி எஸ் அகாடமி பள்ளியும், மூன்றாமிடத்தை அகரம் பப்ளிக் பள்ளியும், நான்காமிடத்தை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியும் பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளின் முடிவுகளை அறிவித்தார். நிர்வாக இயக்குநர் முனைவர் பி சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
வெற்றிப் பெற்ற பள்ளிகளுக்கு தி யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், நிர்வாக இயக்குநர் முனைவர் பி சிவக்குமார், தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி, துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா ஆகியோர் மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
மேலும் போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும், போட்டிகள் நடைபெற உறுதுணையாக இருந்த யுனைடெட் பப்ளிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பூபதி, நரேஷ் மற்றும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
0Shares