உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஓவியப்போட்டி
![]()
திருவள்ளூர் நவ 19 :
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 4 பிரிவுகளில் ஓவியப்போட்டி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
டிசம்பர் 03.12.2025, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற 21.11.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு பிரிவுக்கான ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோர், இயக்கத்திறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், புறவுலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறைபாடுடையோர் அவர்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம். 10 வயதிற்கு கீழ் Crayons and colour Pencil, 11 -18 வயதிற்கு வரை Water colour, 18 வயதிற்கு மேல் தங்கள் விருப்பப்படி எந்த பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையலாம்.
இதற்கான Chart Paper (A3 or A4 size) பயனாளிகள் கொண்டு வர வேண்டும். இதில் முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.500 , மூன்றாம் பரிசு ரூ.250 வழங்கப்பட உள்ளது.இதற்கான கால அவகாசம் 1 முதல் 2 மணி நேரம் வரை. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை 20.11.2025 க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை பதிவு செய்ய திருவள்ளூர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

