168. மிதிவண்டி நாடளுமன்ற உறுப்பினர் வழங்கினார்
![]()
நீலகிரி மாவட்டம்,
உதகை பெத்தலகேம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 168. மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் வழங்கினார்
நீலகிரி மாவட்டம், உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 168 மாணவிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி வரவேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களின் ஆதரவின்றி வாழும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 2 ஆயிரம், அன்புச்சோலை திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்ட வருகிறது.
அதைபோல், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா சீருடைகள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், மாணவச்செல்வங்கள் வீட்டின் அருகிலிருந்து பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் பள்ளி கல்வித்துறையின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில், 2021-2022 ஆம் ஆண்டு முதல் 2024-2025 ஆம் ஆண்டு வரை 17,718 மிதிவண்டிகள் ரூ.8.67 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1,565 மாணவர்கள் மற்றும் 2,059 மாணவிகள் என மொத்தம் 3,624 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இன்று உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 168 மாணவிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற ஏராளமான திட்டங்கள் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவச்செல்வங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்மன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) நந்தகுமார், சின்னமாது (தொடக்க நிலை), உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் தரவிக்குமார், உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்சகோதரி சகாயமேரி, ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

