ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ ஆய்வகம் துவக்கவிழா

Loading

கோவை
மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில்   ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ எனும் ஆய்வகம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள புதிய ஆய்வகத்தை திறந்து வைத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம் மாணவர்களின் கற்றல் தாண்டி உள்ள ஆய்வுகளுக்கு இது போன்ற மையங்கள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்…
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பாக  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆராய்ச்சியினை மேம்படுத்தும் விதமாக ஐடியா ஆய்வகம் மற்றும் கோமேக் தொழிற்சாலை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த புதுமை சுற்றுச்சூழல் அமைப்பான ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ. எனும் புதிய  உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம்  கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,இந்தியா வல்லரசு ஆவதில் பொறியாளர்களின் பங்கு அதிகம் இருப்பதாக கூறிய அவர்,கற்றல் திறன்களை மேம்படுத்துவதோடு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். குறிப்பாக இது போன்ற நவீன ஆய்வகங்களை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை கற்பதில் உலக அளவில்  இந்திய மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சுட்டி காட்டினார். தொடர்ந்து ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை கல்லூரியின் தலைவர் மதன் செந்தில் மற்றும்  பேராசிரியர்.சீதாராம் ஆகியோர்  பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில்  இரத்தினம் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.இரா.மாணிக்கம் , இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவரும், முதன்மை வணிக அதிகாரியுமான முனைவர் நாகராஜ்,
இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் முனைவர்.கீதா,உட்பட பலர் கலந்து கொண்டனர்…
0Shares