நீலகிரி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் பொம்மன் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களுக்கும், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம், பொம்மன் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாமானது அப்பகுதியில் அமைக்கப்பட்டு, கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் APP யில் பதிவேற்றம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டு, கூடுதலாக வருவாய்த்துறை, ஊராட்சித்துறை பணியாளர்களை கொண்டு, APP யில் பதிவேற்றம் செய்யும் பணிகளை அறிவுறித்தினார். தீவிரப்படுத்த வேண்டுமென
இந்நிகழ்வில் வாக்குபதிவு அலுவலர் / குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பீட்டாஞானராஜ், உதவி வாக்குபதிவு அலவலர் / கோத்தகிரி வட்டாட்சியர் திருமதி ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

