ஈரோடு மாரத்தான் ஓட்டத்தில் 5500க்கும் மேற்பட்டோர்

Loading

ஈரோடு மாரத்தான் ஓட்டத்தில் 5500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி, ஈரோடு ரன்னர்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ஈரோடு மாரத்தான் ஓட்டத்தில் 5500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
ஈரோடு அடுத்த ரங்கம்பாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் ஈரோடு மாரத்தான் நான்காம் பாகம் நடைபெற்றது. உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை, பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் அனிதா பால்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அம்ரித் ஜெயின் உட்பட 5500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு ஓடினர். மாரத்தான் ஓட்டமானது 32 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தினசரி வாழ்வில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்காம் ஆண்டாக இந்த மாரத்தான் நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அனைவரும் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்று தெரிவித்தார்.
ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 5 கிலோமீட்டர் தூரம் ஓடினர்.
0Shares