இந்தியமருந்தியல்சங்கம்,நவஅறக்கட்டளை வார விழா
![]()
கோவை
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா வளாகத்தில், இந்திய மருந்தியல் சங்கம், தமிழ்நாடு மருந்தியல் நவ அறக்கட்டளை இணைந்து நடத்திய 64வது தேசிய மருந்தியல் வார விழாவின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழ்நாடு மாநில கிளையின் இந்திய மருந்தியல் சங்கம்,தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை சென்னை மற்றும் கோவை இணைந்து 64வது தேசிய மருந்தியல் வார்த்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வளாகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. இதன் துவக்கவிழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்திய மருந்தியல் சங்க தமிழ்நாடு தலைவர் ஜெயசீலன் வரவேற்புரையாற்றினார். எஸ்என்ஆர் அன் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மருந்தியல் நல அறக்கட்டளையின் தலைவர் முனைவர் எஸ்.வீ.வீரமணி கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீராம், 64வது தேசிய மருந்தாளுநர் வாரத்தின் கருப்பொருள் குறித்து விளக்கவுரையாற்றினார். தொடர்ந்து மருந்தகத் தொழிலில் பல துறைகளில் சிறந்து விளங்கும் மருந்தாளுனர்களை சிறப்பிக்கும் வகையில், இந்திய மருந்தியல் சங்கத்தின் சார்பாக, பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மருந்தாளுநர், தொழில் துறை கல்விசிறப்பு, ஒழுங்குமுறை சிறப்பு, சமூக மருந்தகத்தில் சிறந்து விளங்குதல், மருத்துவமனை மருந்தகம், கல்வி நிர்வாகம், மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை, மூலம் கட்டுரை போட்டி, பி ஃபார்ம் பிரிவில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு எம் ஃபார்ம், மற்றும் பார்ம் டீ, ஆய்வு கட்டுரை பரிசுகள் மற்றும் கல்வி ஊக்க தொகைகள் வழங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்திய மருந்தியல் சங்கத்தின் கோவை கிளை தலைவர் முனைவர் ராமநாதன், ஜே.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சார்பாக முனைவர் சுரேஷ், மற்றும் முனைவர் டி.கே.ரவி பேராசிரியர் சின்னசாமி, இந்திய மருந்தியல் சங்க செயலாளர் ராஜேஷ் எச்.பண்டாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

