கொடிசியாவளாகத்தில்வண்ணமயமான ஸ்கைடான்ஸ்
![]()
கோவை
கோவை கொடிசியா வளாகத்தில், வண்ணமயமான ‘ஸ்கைடான்ஸ்’ நிகழ்வுடன் கோவையில் நடைபெறும், கோவை விழாவின் 18வது பதிப்பு கோலாகலத் துவங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..
ஆண்டு தோறும் கோவையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, கோவையில் கோவை விழா கொண்டாட பட்டு வருகின்றது. இதன்
18வது பதிப்பின் துவக்கவிழா கோவை கொடிசியா வளாகத்தில் வண்ணமயமான விளக்குகளுடன் துவங்கியது.
முதல் நாளில், ‘ஸ்கைடான்ஸ் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை நகரத்தின் பிரம்மாண்டமான ப்ரொஜெக்ஷன் மேப்பிங் நிகழ்ச்சியாக நடைபெற்ற இதனை முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் கோவை விழா குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்.
மக்களின் மனம் கவர்ந்த, விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சியின் 4 வது பதிப்பு நடைபெற உள்ளது எனவும், கோயம்புத்தூர் விழா, கொடிசியா மற்றும் யங் இந்தியன்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இரண்டாவது கோயம்புத்தூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா, நவம்பர் 14 முதல் 16 வரை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் எனவும், பாரம்பரிய நடனம் மற்றும் கர்நாடக இசையின் பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நோக்குடன், இளம் மாணவர்களையும் சிறப்பு மாணவர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு குழந்தைகள் பேரணி நடைபெற உள்ளதாகவும் இதே போல பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நடைபெற உள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து வண்ண விளக்குகளால் கூடிய காளோளி காட்சி லைட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

