அரசுமேல்நிலைப்பள்ளியில்161மிதிவண்டி வழங்கினர்
![]()
சேலம்
வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 161 -மிதிவண்டிகள் வழங்கும் விழா
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் இதில் சேலம் மாவட்டத்தில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம் செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டியார்,வீரபாண்டி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எஸ்.சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு 84 சைக்கிள் மாணவிகள் 77 சைக்கிள் மொத்தம் 161 சைக்கிள் மிதிவண்டிகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.பரமேஸ்வரி வேம்படிதாளம் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் அமுதா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சின்னசாமி ஆகியோர் உள்ளனர்.

