வாக்காளர்சிறப்பு தீவிரதிருத்தப்பணிகள் விழிப்புணர்வு

Loading

தேனி மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision)  பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை   வாக்காளர் பதிவு அ லுவலர்  /  பெரியகுளம்  சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன்,  அவர்க ள்  தொடங்கி  வைத்தார்.

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையத்தில்  (13.11.2025) அன்றுவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்         (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக  விழிப்புணர்வு பேரணியை வாக்காளர் பதிவு அலுவலர்  /  பெரியகுளம்   சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., அவர்கள்  தொடங்கி  வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer – BLO)   இல்லம் தோறும்  சென்று, கணக்கெடுப்புப் படிவம்  விநியோகம்  செய்யப்பட்டு, சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மகளிர்  சுய உதவிக்குழுவினரின் விழிப்புணர்வு பேரணியியை வாக்காளர் பதிவு அலுவலர்  /  பெரியகுளம் சார் ஆட்சியர்   அவர்கள்  தொடங்கி  வைத்தார்.

இப்பேரணியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பதாகைகளை மகளிர்  சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஏந்திசென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இப்பேரணி  காமராஜர் பேருந்து முனையத்தில் தொடங்கி,  தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.

இப்பேரணியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி சந்திரா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares