ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை

Loading

சேலம்

 

சேலம் மாவட்டம் குரங்கு சாவடி சாஸ்தா நகரில்  ஸ்ரீ ஐயப்பா ஆசிரமம் உள்ளது. இங்கு உள்ள ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை உற்சவ பூஜை மற்றும் மகரஜோதி திரு ஆபரண தரிசனத்திற்கான  சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதனை அடுத்து இந்த வருடத்திற்கான  மகரஜோதி விழா தொடர்பான  பத்திரிக்கையாளர் சந்திப்பு  கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன்  தெரிவித்ததாவது, ஸ்ரீ சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் வருகின்ற நவம்பர் மாதம் 17ஆம் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் ஜனவரி 15 தை முதல் தேதி வரை மண்டல பூஜை உற்சவ பூஜை மற்றும் மகரஜோதி திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு நமது ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை மூலம்  முதல் கும்பாபிஷேகமும், 2012 ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகமும், 2024 ஆம் ஆண்டு மூன்றாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த வருடத்தின் முதல் நிகழ்ச்சியாக மகரஜோதி விழாவிற்கான முகூர்த்த கால் போடும் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் 7:00 மணிக்குள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு சபரிமலை செல்லும் பக்தர்கள் சுமார் 10,000 மேற்பட்டோர்  மாலை அனைத்தும் இருமுடி கட்டியும் சபரிமலைக்கு இங்கிருந்து சென்றனர். 4500 முதல் சுமார் 6000 பேர் ஆந்திரா விசாகப்பட்டினம் விஜயவாடா ஹைதராபாத் மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நடை பயணமாக வந்து இங்கு தங்கி சபரிமலைக்கு சென்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை மூலம்  செய்து தந்தோம். இந்த ஆண்டும் சுமார் 12,000 திற்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து இங்கிருந்து சபரிமலைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுமார் 6500 சதுர அடியில் செட் அமைக்கப்பட்டு  மாலையிடுவதற்கும், இருமுடி கட்டுவதற்கும்  ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சுமார் 15,000 சதுர அடியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் எந்த இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் விரைவாக செய்ய முழு ஏற்பாடும் செய்யப்படும். மகரஜோதி விழாவினை முன்னிட்டு சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தை முதல் தேதி வரை சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சுமார் 1000 பேருக்கு  சிறப்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த ஆண்டு சுமார் 400க்கும் ஏற்பட்ட பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து நடை பயணமாக  சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்திற்கு வந்து தங்கி சபரிமலைக்கு  சென்றுள்ளனர். நமது கோவிலுக்கு பொருட்கள் நன்கொடை வழங்குபவர்கள் கோவில் அலுவலகத்தில் முறைப்படி செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொண்டார். மேற்படி நமது கோவிலின் பெயரை பயன்படுத்திக்கொண்டு   வெளிநவர்கள் பணம் வசூலிப்பதற்கோ பொருட்களை வாங்குவதற்கோ அறக்கட்டளை சார்பாக யாரையும் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு யாரேனும் வசூரில் ஈடுபட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. இந்த வருடமும் நமது கோவிலுக்கு உற்சவ காலங்களில் பொதுமக்களும் மற்றும் பக்தர்களும் வந்து விசேஷ பூஜைகளில் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பனின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு அறக்கட்டளையின் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீ ஐயப்பா அறங்காவலர்கள்  செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவணன் பெருமாள்  உட்பட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

0Shares