சர்வதேச கூட்டுறவு ஆண்டு -2025 மருத்துவ முகாம்
![]()
ஈரோடு நவம்பர் 11
சர்வதேச கூட்டுறவு ஆண்டு -2025 முன்னிட்டு
மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு , தங்கம் மஹால், மேட்டுக்கடை, பெருந்துறை ரோடு, ஈரோட்டில் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் உடல் ஆரோக்கியத்துடன் செயல்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், பொது மருத்துவம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் 720 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா அவர்கள், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் / செயலாட்சியர் மு.பா.பாலாஜி அவர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

