தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
![]()
திருவள்ளூர் நவ 08 :
மதுரவாயலில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா :
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரவாயல் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா விழா நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார்.மாநில துணை தலைவர் பி.பால்ராசு,திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் பி.தேவராஜ்,வளசை பகுதி தலைவர் பி.வி.பாபு,மாநில சட்ட ஆலோசகர் வி.தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் நல இயக்குநர் எம்.ஷோபியா பேகம், மாநில துணை செயலாளர் பி.யுவராஜ்,வடக்கு மண்டல செயலாளர் டி.ராதாகிருஷ்ணன், எஸ்.கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.புஷ்பராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் என்.புண்ணியமூர்த்தி,தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (ஓய்வு) நீதியரசர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலாளர் இரா.கற்புரசுந்தரபாண்டியன்,பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரவாயல் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் மோகன கிருஷ்ணன்,புகழ் அழகி,விஜயன்,கணபதி,கருத்து காமராஜ்,ஏழுமலை,லோகநாதன்,சந்தி ரலேகா,மூர்த்தி,ரஜினி ரமேஷ்,மூவேந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

