சர்தார் வல்லபாய் பட்டேல்150-வது பிறந்த நாள்

Loading

திருவள்ளூர் நவ 07 :
திருவள்ளூரில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மேரா யுவ‌ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒன்றிய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் செயல்படும் மேரா யுவ‌ பாரத் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி ஜே.என்.சாலை காமராசர் சிலை வரை பேரணி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம், இளவயது கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள். பெண் கல்வியின் முக்கியத்துவம், பாலின தேர்வு மற்றும் பெண் சிசு கொலைகளை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் பொருத்தப்பட்ட ஒலிச் செய்தியுடன் கூடிய வாகனம் (ம) பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள், குழந்தைகள் உதவி எண். பெண்களுக்கான உதவி எண் (ம) முதியோர் உதவி எண் குறித்த விவரங்கள் அடங்கிய பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் அடையாள ஒப்பந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பெண்களுக்கான இலவச உதவி எண் 181, குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098, முதியோருக்கான இலவச உதவி எண் 14567 ஆகும்.
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான  விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து விவசாயிகளிடம் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர் சொ.வனிதா,  வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் (பொ) வே.பால்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares