கோவை, வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் விழா
![]()
கோவை
கோவை, வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில்
அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கோவிலைச் சுற்றி காங்கிரட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் சிவபெருமானுக்கு அரிசி உணவை
அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது. எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு சமம் ஆகும். அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அடுத்துள்ள மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவில் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் விருந்தீஸ்வரர் மீது பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், இனிப்புகள், கார வகைகள் மற்றும் 50 கிலோ அரிசியை வேகவைத்து அன்னத்தை அற்பணித்து சுவாமியை அலங்கரித்திருந்தனர். தொடர்ந்து விருந்தீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை ஆராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து விருந்தீஸ்வரர் மீது அர்ப்பணிக்கப்பட்ட அன்னத்தை விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமாக வழங்கினர். இந்து நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விருந்தீஸ்வரர் அருள் பெற்று சென்றனர்.
முன்னதாக கோவிலை சுற்றிலும் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி வி மணி தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சாமிநாதன், அம்சவேணி பழனிசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பூஜைகளை கோவில் பூசாரி தயாநிதி குருக்கள் முன்னின்று நடத்தினார். மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை எல் எம் டபிள்யூ அசோகன், ஆர் டி ஓ பழனிசாமி, வேல்முருகன், தம்பி பார்த்திபன், வக்கீல் கதிர்வேல், வடமதுரை மணிகண்டன், ஜோதிமணி, கலா, ஜெயக்கொடி, பேபி, வி பி சண்முகம், ரவிச்சந்திரன், தனிகை செல்வன், வெள்ளக்கிணறு செல்வகுமார், மோகனசுந்தரம், விஜயகுமார், செல்வராஜ், பாபு, விபின், அபிசந்திரன், கோவில் அண்ணாபிஷேக குழு, பிரதோஷ குழு, சஷ்டி குழுவினர் செய்திருந்தனர்.

