நீரில் உயிரிழந்த6நபர்களின்5வாரிசுக்கு காசோலை

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு ரூ.18 லட்சத்திற்கான காசோலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் நவ 05 : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், பூவிருந்தவல்லி வட்டம் ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு  ரூ.18 இலட்சத்திற்கான காசோலைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
முன்னதாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 31.10.2025 அன்று எண்ணூர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த திருமதி.தேவகி(30) த/பெ செல்வம் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் பெத்திக்குப்பம், காயத்ரி (18) த/பெ மாதவன் தேர்வழி, ஷாலினி(18) த/பெ ஜம்புலிங்கம் பெரிய ஓபுளாபுரம், பொன்னேரி வட்டத்தை சேர்ந்த பவானி (19) க/பெ செல்வகுமார், கோளுர் தேவம்பட்டு பகுதிகளை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ,12 இலட்சம் மதிப்பிலான நிதி உதவிகளுக்கான காசோலைகளை அமைச்சர் சா.மு.நாசர் ஆறுதல் கூறி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கடந்த 1.11.2025 அன்று பூவிருந்தவல்லி வட்டம் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த.தமீம்அன்சாரி (எ) தமிழரசு-வசந்தா தம்பதியினரின்  2 குழந்தைகள் செல்வன்.ரியாஸ் (5) மற்றும் செல்வன்.ரிஸ்வான்(3) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ,6 இலட்சம் மதிப்பிலான நிதி உதவிக்கான காசோலைகளை அமைச்சர்  ஆறுதல் கூறி வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து, கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 198 வீடுகளின் கட்டுமான பணிகள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜ், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், திருவேற்காடு நகராட்சி ஆணையர் பே.ராமர், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உதயம்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares