அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு
![]()
சென்னை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவசக்தி நகர், மகாத்மா காந்தி நகர், கண்ணகி நகர் மற்றும் வினோபா நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் பணி, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தெரு விளக்குகள் கூடுதலாக அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக
மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (1.11.2025) மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-65-க்குட்பட்ட சிவசக்தி நகர், மகாத்மா காந்தி நகர், கண்ணகி நகர் மற்றும் வினோபா நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் பணி, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தெரு விளக்குகள் கூடுதலாக அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது : கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தங்கு தடையின்றி குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகள் மேற்கொண்டு சிறப்புமிக்க தொகுதியாக திகழ்கிறது, இதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சீரிய முயற்சி தான். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகள் அரசுக்கு சொந்தமான பல இடங்களில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் இல்லை என்ற குறைகள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு சென்றவுடன், தற்போது சிவசக்தி நகர், கண்ணகி நகர், அண்ணா நகர், மகாத்மா காந்தி நகர், வினோபா நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சனைகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரியுடன் நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைக்கு கொளத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இரண்டு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டோம்.
பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். தீர்க்கப்படாமல் இருக்கின்ற பல பிரச்சனைகளை ஒரு முடிவினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுப்பார்கள். கொளத்தூர் தொகுதி பொருத்தவரை முழுமையாக அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்ட தொகுதியாக மாற்றுவது முதலமைச்சருடைய கனவு. இந்த கனவு ஏற்ற வகையில் குடிநீர், கழிவுநீர் வெளியேற்றுவதற்கு, பூங்கா, தடையில்லா மின்சாரம், திருமண மண்டபம் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் 13 பள்ளிகள் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். சுமார் 11 பள்ளிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இரண்டு பள்ளிகள் சீனிவாசன் நகர், கம்பன் நகர் வருகின்ற 2026 ஜனவரி மாதத்திற்குள் திறக்கப்படும். குடிநீர் வராத சில பகுதிகளில் 140 கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், சென்னைக் குடிநீர் தலைமைப் பொறியாளர் திரு. இராதாகிருஷ்ணன், மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளர் (வடக்கு) திரு. பழநிவேலன், மாமன்ற உறுப்பினர் திரு.நாகராஜன், வருவாய்த்துறை, மின்சாரத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

