விளையாட்டு போடிட்களில் வெற்றி பெறுவது சிறப்பு
![]()
ஈரோடு
விளையாட்டு போடிட்களில் வெற்றி பெறுவது சிறப்பு, மேலும் போட்டிகளில் பங்கேற்பது தனிச்சிறப்பு.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே சோதனை தேர்வு போட்டியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேச்சு.
ஈரோடு மாவட்டம், சித்தோடு, டெக்ஸ்வேலி வளாகத்தில், ஈரோடு மாவட்ட கராத்தே மாஸ்டர்ஸ் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே சோதனை தேர்வு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் (01.11.2025) அன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் படிப்புடன் சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளானது நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் விளையாட்டில் தங்களது திறமையை காண்பிக்க உதவியாக இருந்தது. மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ.38 கோடி மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு என்பது மாணவ, மாணவியர்கள் தங்களது படிப்பில் கவனத்தை ஒருமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும், உந்துதலையும் அளிக்கிறது. அதன்படி இன்றைய தினம் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளுக்கான தகுதித்தேர்வு நடைபெறுகிறது.
தற்காப்பு கலைகள் என்பது வெளிநாட்டிலிருந்து வரப்பெற்றவை அல்ல. எல்லா தற்காப்பு கலைகளுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்த வகையில் தற்காப்பு கலையான கராத்தே மற்றவர்களை தாக்குவதற்கும் காயப்படுத்துவதற்கும் அல்ல. அது நம்மை நாம் ஆபத்தான சூழ்நிலையில் தற்காத்துக் கொள்வதற்கான கேடயம் ஆகும். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் படிப்பிலும், விளையாட்டிலும், பணிக்கு செல்லும் போதும் என பல்வேறு நிலைகளில் ஊக்கத்தையும், ஆற்றலையும் அளிக்கும். விளையாட்டு போடிட்களில் வெற்றி பெறுவது சிறப்பு, மேலும் போட்டிகளில் பங்கேற்பது தனிச்சிறப்பு, எனென்றால் அதன் மூலம் நுணுக்கங்களையும், அனுபத்தையும் நாம் பெற முடியும். இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஜிம்னாஸடிக் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் திறந்து வைக்கப்டவுள்ளது. மேலும் 6000 நபர்கள் கலந்து கொள்ளும் அளவில் மாரத்தான போட்டியும் நடைபெறவுள்ளது. இதுபோன்று விளையாட்டிலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் மாவட்டத்தில் பணிபுரிவது பெருமையாக உள்ளது. இன்று பல்வேறு மாவட்டத்திலிருந்து போட்டியில் பங்குபெற உள்ள மாணவ, மாணவியர்களுக்கும், அவர்களின் பயிற்றுனர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெறும் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, மெட்ரிக்குலேசன், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 1500 மாணவியர்கள், 2200 மாணவர்கள் என 3700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் மகாராஸ்ட்ரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார், தமிழ்நாடு உடற்கல்வி தலைமை ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சதிஷ்குமார், ஈரோடு மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் திரு.சாலமோன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

