அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவ முகாமினைபார்வை

Loading

 

இராணிப்பேட்டை

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள்  பனப்பாக்கம்  பேரூராட்சியில் நடைபெற்ற
“நலம் காக்கும் ஸ்டாலின்”  மருத்துவ முகாமினை  பார்வையிட்டார்
.

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் பனப்பாக்கம், பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்   (1.11.2025) அன்றுநடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு  வழங்கப்படும் மருத்துவ சிசிச்சைகளை  பார்வையிட்டு பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்கள்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அட்டைகளை வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப.,  அவர்கள் தலைமை தாங்கினார்.

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், 2 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகளையும், 5 நபர்களுக்கு மக்களைத் தேடி   மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்னையும், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு சக்கர  நாற்காலியினையும் வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள துறைச் சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி அரகங்களை பார்வையிட்டார்கள்.

தொடர்ந்து, பொது பிரிவு பரிசோதனை, மருத்துவ பரிசோதனை மையம் ஆண்கள், பெண்கள் ஸ்கேன் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள மையம் காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, சுவாச மண்டல பிரிவு ஆகியவைகளையும் பார்வையிட்டார்கள். மேலும் ஆயுர்வேதம் சித்தா  பிரிவுகளையும் பார்வையிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திருமதி.கவிதா சீனிவாசன், துணை இயக்குனர் பொது சுகாதார மருத்துவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,  இராணிப்பேட்டை

0Shares