தாய் தந்தையை இழந்த 19 வயது இளம் பெண்

Loading

திருவள்ளூர் அருகே தாய் தந்தையை இழந்த 19 வயது இளம் பெண் 40 பி.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை :

திருவள்ளூர் நவ 02 : திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். (23). இவரின் தாய், தந்தை இருவரும் சிறு வயது இருக்கும் போதே இறந்து விட்டனர். இதனால் அருண்குமாரும், தங்கை பாரதி (19) யும் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இதில் பாரதி பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் இருந்தவரை அண்ணன் அருண்குமார் சமாதானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மன குழப்பத்தில் இருந்த பாரதி கடந்த 28-ஆம் தேதி இரவு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.  இதுகுறித்து அண்ணன் அருண்குமார் கேட்டபோது வீட்டில் இருந்த 40 பி.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.இதனையடுத்து தண்டலம் சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தாய் தந்தை இல்லாத ஏக்கத்தில் 19 வயது இளம் பெண் 40 பி.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து மணவாளநகர் போலீசில் அருண்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
0Shares