கோவை அறிவியல் கண்காட்சி

Loading

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″ எனும் நிகழ்ச்சியில் நீங்களும் ஆகலாம் எனும் தலைப்பில் மாணவ மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சி படுத்த பட்டது. 
கோவை கருமத்தம் பட்டி பகுதியில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில்,  “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  6 – ம் வகுப்பு முதல் முதல் 12 – ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் சிந்தனை திறன், புதிய படைப்பாற்றல் திறமைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். நீங்களும் ஆகலாம் அப்துல் கலால் என்ற கோட்பாடுகளின் கீழ் நடைபெற்ற
இக்கண்காட்சியில் மாணவர்கள் தம்முடைய எதிர்காலத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதியவற்றை ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 80 பள்ளிகளிலிருந்து சுமார் 600 பள்ளி மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள்
மருத்துவ தொழில்நுட்பம்,  விமானவியல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், பெண்கள் தொழில்நுட்பம்,  பசுமை தொழில்நுட்பம், பேரழிவு தொழில்நுட்பம்  ஆகிய பிரிவுகளின் புதுமையான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை கோவை அரசூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பெற்றனர்.
 பரிசுகள் வழங்கும் பரிசுகள் வழங்கும் விழாவில், பார்க் கல்வி குழுமங்களின், கண்டுபிடிப்பு மற்றும் பிளேஸ்மெண்ட், இயக்குனர் டாக்டர். எம். பிரின்ஸ் வரவேற்புரையாற்றினார், பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி சிறப்புரையாற்றினார். தலைவர் டாக்டர். பி. வி. ரவி தலைமையரையாற்றினார். மேலும்  சிறப்பு விருந்தினராக பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளை வழங்கி பாராட்டினர்.
முன்னதாக பார்க் கல்வி குழுமங்களின் ஏரோநாட்டிக்கல் பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்த ஒரு செயற்கைக்கோள் சோதனை முயற்சியாக ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு பறக்கும் பலூனை சிறப்பு விருந்தினர் டாக்டர். நம்பினாராயணன் ரிப்பன் வெட்டி பறக்க விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares