முருகன் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம்

Loading

வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலய சுப்பிரமணியர் சன்னதியில்
முருகன் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம்
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சூரபத்மனை முருகன் வதம் செய்து வெற்றி பெற்றதும் வள்ளி தெய்வானையை மணக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முருக பெருமானில் அறுபடை வீடுகள் மற்றும் முருகன் ஆலயங்களில் சூரசம்ஹார விழாவைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை திருக்கல்யாண வையபம் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சூரசம்ஹாரம் செய்து சூரபத்மனை முருகன் வதம் செய்து வெற்றி பெற்றதும் வள்ளி தெய்வானையை மணக்கம் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி வி மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்கல்யாண மண்டபம் வாழைமரம், மாவிலை தோரணம், தென்னம்பாளை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு மணவறை ஊஞ்சலில் எழுந்தருளினார்.
சுவாமி வெண்பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும், தெய்வானை சிவப்பு பட்டு உடுத்தியும் தங்க நகைகள் அணிந்தும் மணமேடையில் காட்சியளித்தனர். பின்னர் சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டுதல் நிகழ்சி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி வேள்வி, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழு நாட்கள் சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள், முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தபின், இந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0Shares