உப்பளம் தொகுதி பாதாளவடிகால் பணிகள்ஆய்வு

Loading

புதுச்சேரி அக்-28
புதுச்சேரி உப்பளம் தொகுதி பாதாள வடிகால்  பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட   சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி
புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை ஜெயமுத்து மாரியம்மன் கோயில் வீதி, நேதாஜி நகர் 1 அசோகன் வீதி, நேதாஜி நகர் 2 வீரன் கோவில் வீதி, நேதாஜி நகர் 3 மெயின் தெரு மற்றும் திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை பாதாள வடிகால் பிரிவு பணிகள் குறித்து துறை அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து பாதாள வடிகாலில் தேங்கி இருந்த கழிவு நீரை உறிஞ்சி எடுக்கும் வாகனத்தின் உதவியுடன் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்பு பகுதியில் பாதாள கழிவு நீர் சாலையில் பொங்கி வழிந்தது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக சரி செய்து கொடுத்தார்.
மேலும், நேதாஜி நகர் 2 பகுதியில் மழை பெய்ததால் பாதாள வாய்க்கால் நிரம்பி வழிந்த நிலையில், அங்கு தற்காலிக நீர் எஸ்கேப் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர், இளநிலை பொறியாளர்கள் சங்கர் மற்றும் பாலாஜி, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
0Shares