மாணவர்களின் மன இருக்கத்தை போக்க நிகழ்ச்சி
![]()
மாணவர்களின் மன இருக்கத்தை போக்கும் விதமாக
அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில்
விளையாட்டுகள், உணவு அரங்குகள், கடைகள் அமைக்க பட்டு கொண்டாட பட்டது.
கோவை துடியலூர் அருகே உள்ள அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் தொடங்கி 100 நாட்கள் ஆவதை ஒட்டி மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான விளையாட்டுகள் மற்றும் உணவு அரங்குகள், கடைகள் அமைத்திருந்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ளது அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் வகுப்புகள் தொடங்கி 100 நாட்கள் ஆவதை ஒட்டி மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 100 வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிகளை மாணவ மானவிகளே தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அன்புவடிவு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த கல்வியியல் நிபுணர் டாக்டர் சித்ரா குப்புசாமிக்கு மாணவர்கள் பேண்ட் வாத்தியத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் பேசிய சிறப்பு விருந்தினர் சித்ரா குப்புசாமி நமது குழந்தைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை உண்டு என்பதை செயல்முறை வழிகாட்டுதல் மூலம் பெற்றோர்களைக் கொண்டு சிறப்பாக விளக்கினார்.
பள்ளியின் துணைச் செயலர் பி சி ஆர் பிரேம் சந்த் தனது உரையில் இந்நிகழ்ச்சியில் 100 இதழ்களின் பெயர்களை கூறி அசத்திய பத்தாம் வகுப்பு மாணவி சவுமியாவையும், 100 நம்பிக்கையான வார்த்தைகளை கூறிய நான்காம் வகுப்பு மாணவி இனாயாவையும், தமிழில் உள்ள் 100 நேர்மறைச் சொற்களைக் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி வனம் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார்.
இடை இடையே படுகர் இனி மக்களின் பாரம்பரிய நடனம், 100 என்ற எண்கள் உருவில் கைகளை வைத்து உருவாக்குதல் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடந்து 100 வது நாள் விழா நிகழ்ச்சியினை சிறப்பு விருந்தினர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதில் பள்ளி வளாகத்தில் பல்வேறு வடிவில் காற்று பலூன் விளையாட்டுகள், தண்ணீரில் மிதக்கும் பலூன் விளையாட்டுகள், சிறிய ரயில் விளையாட்டு, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் மாணவ மாணவிகளுக்காக குறைந்த விலையில் உணவு அரங்குகள் கடைகள் அமைத்திருந்தனர்.
பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்களில் மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்களுக்காக விசேச உணவு பொருட்கள் தயாரித்து வழங்கப்பட்டது பள்ளி முதல்வர் அன்பு வடிவு மற்றும் துணை முதல்வர் தேவ இரக்கம் சுஜாதா ஆகியோர் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

