வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் ஆலோசனை
![]()
புதுச்சேரி அக்-27
காரைக்காலில் திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்ஏவுக்கள் நாஜிம், என்டிஆர் பங்கேற்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் PSR நகரில் மாவட்ட திமுக சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த வாக்கு சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் பிஜேபி அரசு வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் எதிர்கட்சியினர் வாக்குகளை சிதறடிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான A.M.H.நாஜிம் குற்றச்சாட்டு. திமுக வாக்கு சாவடி முகவர்கள் கவனத்துடன் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.நிரவி திருப்பட்டினம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் முன்னிலையிலும், காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான A.M.H.நாஜிம் தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான A.M.H.நாஜிம் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் என்ற பெயரில் ஒன்றிய அரசு வாக்காளர்கள் பெயர்களை நீக்கம் செய்து வருவது பிற மாநிலங்களே சாட்சி என கூறினார்ஆகையால் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஒன்றிய அரசின் இத்தகைய சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் வாக்காளர்கள் பட்டியலை மிகவும் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணியின் அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தொகுதி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!

