தனிக்ஷ் ஜுவல்லரிபழைய தங்க நகை மாற்றும் திட்டம்

Loading

கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ்  ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு தேவையான தங்கங்களை தனுக்ஷ் ஜுவல்லரி நிறுவனம் 99 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து தங்கங்களை இறங்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய நகைகளை மீண்டும், நகைகளாகவோ, தங்க நாணயங்களாகவோ மாற்றி கொள்ளும் திட்டத்தை பொள்ளாச்சியில் உள்ள தனிக்ஷ் ஜுவல்லரியில் தீபாவளி வரை அறிமுகம் செய்திருந்தனர். வாடிக்கையாளர்களின் வரவை எதிர்கொண்டு இந்த திட்டத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாகவும் இதனை வாடிக்கையாளர்கள் பயண்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரி கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய டைடன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி அஜாய் சாவ்லா கூறியதாவது.. கடந்த பல ஆண்டுகளாக தனிக்ஷ் நிறுவனம் தங்க பரிமாற்ற திட்டத்தின் கீழ், 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கடந்து, 1.7 லட்சம் கிலோ தங்கத்தை மறு சுழற்சி செய்து உள்ளதாகவும், தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பழைய தங்க நகைகளை வழங்கி, புதிய தங்கநகை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 0 சதவிகிதம் பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை வழங்கி வருகின்றதாக கூறினார். மேலும் தனிக்ஷ் நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக பிரபலமான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்து உள்ளதாகவும், இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் 9 கார்ட் தங்க நகைகளையும் கூட அதன் மதிப்பு மாராமல், 0 சதவிகித பிடித்தம் திட்டத்தின் கீழ் புதிய நகைகளாக வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார். கூடுதலாக தற்போது நமது கிளையில் தங்க நகை வடிவமைப்பாளர் ஒருவரை இதற்காக அனுமதித்து உள்ளதாக வும், இவர் வாடிக்கையாளர்களின் நகைகளை அவர்களின் கண்கள் முன்பாகவே உருக்கி அதன்தரத்தை வாடிக்கையாளுக்கு உடனுக்குடன் தெரிவித்து விடுவதால் வாடிக்கையாள் அதன் ஈடுக்கு உடனுக்குடன் புதிய நகைகளை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares