மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நோய் தொற்று

Loading

தண்டலம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் :
 
திருவள்ளூர் அக் 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதே போல் திருவள்ளூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரி கால்வாய்  மூலம் மழை நீர் தேங்காமல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஏரி கால்வாயை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கி நிற்கிறது.
கழிவு நீருடன் மழை நீரும் கலந்து நிற்பதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி டெங்கு , மலேரியா போன்ற நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேங்கியிருக்கும் மழை நீரில் பாம்பு தேள் போன்ற விஷபூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் எந்த நடவடிககையும்  எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares