இன்றய ராசிபலன்:-20-10-2025

Loading

இன்றய ராசிபலன்:-20-10-2025
மேஷம்

இன்று தாமதமான வேலைகள் நிறைவேறும். புதியதாக அறிமுகமாகும் நபர் தங்களுக்கு உதவியாக இருப்பார். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது செல்போன் பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

நினைத்த காரியம் வெற்றியாகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தங்கள் நலம் விரும்பிகளை இன்று சந்திப்பீர்கள். அது மகிழ்வினைத் தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கணவர் வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும்.

 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

நீண்டநாளாக எடுத்த முயற்சிகள் பலிதமாகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் சாதனை தங்களுக்கு பெருமை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

தெய்வீகப் பணிகளில் மனம் நாடும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். பயணங்கள் நன்மையளிக்கும். தம்பதிகள் ஒற்றுமை காப்பர். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் செய்வீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நகைக் கடன்களை அடைக்க வழிகிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்காக சற்று நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

பணவரவு சீராகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்கள் உதவி கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவர். பங்குச் சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

உறவினர்கள் வருகை உண்டு. மாணவர்கள் உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக செல்வர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஒய்வு கிடைக்கும். வீட்டிலிருந்தபடியே இலக்கினை முடிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

உடல் சோர்வு நீங்கி உற்சாகம் கூடும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் அமோகமாக செல்லும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

கடந்த நாட்களில் இருந்த மனக்கவலை நீங்கும். புது மலர்ச்சி கிடைக்கும். நம்பிக்கை மிளிரும். கணவன் மனைவி உறவில் சமாதானம் அடைவீர்கள். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். மாணவர்களுக்கு உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

பண நெருக்கடி நீங்கும். புதிய நண்பர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பர். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். குடும்பத்தில் பண்டிகை விசேஷங்களை கொண்டாடுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் தள்ளிபோகும். விருந்தினர்களால் வீட்டில் குதூகலம் உண்டாகும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேகம் பொலிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

0Shares