18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..வடகிழக்கு பருவமழை ஆட தொடங்கியது!

Loading

தமிழ்நாட்டில் கோத்தகிரி 14 செ.மீ., கோவிலங்குளம், அருப்புக்கோட்டை தலா 13 செ.மீ., மக்கினம்பட்டி 12 செ.மீ., ராஜபாளையம், சிவகாசி, கவுந்தப்பாடி தலா 11 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகதென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாளுக்குள் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது . வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.மீனவர்கள் நாளை காலைக்குள் கரைக்கு திரும்பவேண்டும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக்கடல், அரபிக்கடலில் கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், தெற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

கனமழையை பொறுத்தவரையில், இன்று 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23-ந் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 24-ந் தேதி வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் கோத்தகிரி 14 செ.மீ., கோவிலங்குளம், அருப்புக்கோட்டை தலா 13 செ.மீ., மக்கினம்பட்டி 12 செ.மீ., ராஜபாளையம், சிவகாசி, கவுந்தப்பாடி தலா 11 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

0Shares