அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக கடந்த ஆகஸ்டு 25-ந் தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தபால் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது என்று கூறியுள்ளது.

மேலும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும் என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது .

கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது . இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம் என்று இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

0Shares