பூண்டி ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு !
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் குன்னவளம் ஊராட்சி குப்பத்துப் பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.81.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.80.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 23 வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுலோச்சனா (வ.ஊ), செல்வி (கி.ஊ) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.