தீபாவளி பண்டிகை..மலைவாழ் மக்களுக்கு புத்தாடை வழங்கிய அரிமா சங்கம்!
உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி துடியலூர் அரிமா சங்கம் சார்பில்
மேல்பதி மற்றும் கீழ்பதி மலைவாழ் மக்கள் தீபாவளி கொண்டாட
அனைவருக்கும் புத்தாடை, புத்தகப்பை மற்றும் பிரியாணி வழங்கினர்.
உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி துடியலூர் அரிமா சங்கம் சார்பில் மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடும் விதமாக கோவை தடாகம் அருகே நெம்பர் 4 வீரபாண்டி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மேல்பதி மற்றும் கீழ்பதி மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மலைவாழ் மக்களுக்கும் வேஷ்டி, துண்டு, சட்டை, சேலை, சுடிதார் உள்ளிட்ட புத்தாடைகளும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப்பை, குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். மேலும் அனைவருக்கும் சிக்கன் பிரியாணியும் வழங்கினர்.
கோவை தடாகம் அருகே உள்ள நெம்பர் 4 வீரபாண்டி மலை அடிவாரப் பகுதியில் உள்ளது மேல்பதி மற்றும் கீழ்பதி மலை கிராமம். இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துடியலூர் அரிமா சங்கம் சார்பில் உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடும் விதமாக கோவை தடாகம் அருகே நெம்பர் 4 வீரபாண்டி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மேல்பதி மற்றும் கீழ்பதி மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மலைவாழ் மக்களுக்கும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் நல்வாழ்வு மாவட்ட தலைவர் செல்வ நம்பி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை துடியலூர் அரிமா சங்க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கி மணி ஓசையுடன் தொடங்கிவைத்தார். இதில் செயலாளர் நிவாஷ் மற்றும் பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அரிமா உறுதிமொழி வாசிக்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போர்களில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிடம் மவுள அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் தினகரன், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், முதலாம் துணை ஆளுநர் பாரதி, முதலாம் பன்னாட்டு இயக்குநர் ராமசாமி, முன்னாள் மாவட்ட ஆளுநர் அழகு ஜெயபாலன், இரண்டாம் துணை ஆளுநர் ராதிகா மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடும் விதமாக 2 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மலை வாழ் மக்களுக்கும் புத்தாடைகளை வழங்கினர்.
இதில் வேஷ்டி, துண்டு, சட்டை, சேலை, சுடிதார் உள்ளிட்ட புத்தாடைகளும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப்பை, குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை முடிந்ததும் முன்னணி மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களை வரவழைத்து இலவச மருத்து முகாம் நடத்தப்படும் என உறுதியளித்தனர். இவைகளைப் பெற்றுக்கொண்ட மலை வாழ் மக்கள் அரிமா சங்கத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் அனைவருக்கும் கேசரி, சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியை ஏ வி முருகேசன் ஒருங்கிணைத்திருந்தார். இதில் துடியலூர் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் என பலர் பங்கேற்றனர்.