ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள்..அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

Loading

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்டபகுதிகளில்ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்றுபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருநகரசென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (13.10.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பெருநகர
சென்னை மாநகராட்சியின் சார்பில் வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி.
தெருவில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டுமானப் பணிமற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும்முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணி, வார்டு-54க்குட்பட்ட அம்மன் கோவில் தெரு, சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.2.97 கோடிமதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக்கட்டடப் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இப்பணிகளை உரியதொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்குக்கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா,இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு. பி. ஸ்ரீராமுலு மற்றும் அலுவலர்கள்
உடனிருந்தனர்.

0Shares