கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் உணவகத்தின் துவக்கவிழா!
![]()
சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கென தனி இடம் பிடித்துள்ள ராயப்பாஸ் உணவகத்தின் புதிய கிளை, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறக்கபட்டுள்ளது..
கோவையின், பிரபலமான செட்டிநாடு உணவக நிறுவனங்களில் ஒன்றான ராயப்பாஸ், நிறுவனம் தனது புதிய கிளையை கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறந்துள்ளது. இதனை வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், ராயப்பாஸ் உரிமையாளர் பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ராயப்பாஸ் உணவகத்தின் மேலாளர் ராஜசேகர் கூறியதாவது.. பிரியாணிகளின் சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக பிரியாணி வகைகளை உருவாக்கியுள்ளதாகவும், செட்டிநாடு உணவுகளை தங்களது பிரத்தியேக சமையல் பக்குவத்துடன் இணைத்து சுவையான உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாகவும், மீன் உணவு வகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அதன் சுவையை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் சமைத்து அதனை வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் 15 வகையான மீன் வகைகளுடன், கேரளா மற்றும் செட்டிநாடு பாணியின் கலவையாக வழங்குவதாக கூறினார்.
பல்வேறு வகை மட்டன் உணவுகளும் வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைப்பதுடன், இடியாப்பம், தலைக்கறி, இட்லி, தலைக்கறி, ஆப்பம் நாட்டுக்கோழி குழம்பு, போன்ற சிறப்பு உணவுகள் மாலை நேரங்களில் கிடைக்கும் இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

