10வது எப்.எம்.ஏ.இ தேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி…கோவையில் துவக்கம்!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் துவக்கி வைத்தார் இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் மற்றும் 1300க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் தங்கள் வாகன வடிவமைப்பு திறன்களை தொழில் நிபுணர்கள் குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தினர்
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், கோவையில் நடைபெறும் தேசிய மாணவர் மோட்டார்ஸ்போர்ட் போட்டியின் 10வது பதிப்பை துவக்கி வைத்ததுடன் செய்தியாளார்களை சந்தித்து கூறியதாவது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இயந்திரவியல் மற்றும் தானியங்கி பொறியாளர்கள், அமைப்புடன், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றதாகவும், இந்த போட்டியில் நாடு முழுவதிலும் உள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் கலந்துகொள்கின்றதாக தெரிவித்தார்.
போட்டியில் பங்கேற்கும் அணிகள், தங்கள் சொந்த கார்ட் ரக கார்கள் மற்றும் பைக்குகளை உருவாக்க வேண்டும், அவ்வாறு உருவாக்கப்படும் வாகனங்கள் அக்டோபர் 11ம் தேதி மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறும் போட்டிகளை நிபுணர்கக் குழு மதிப்பீடு செய்யும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள காரி மோட்டார் ரேஸ் ட்ராக்கில் முக்கியப் போட்டிகள் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.