உங்களுடன் ஸ்டாலின் முகாம்… நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிங்காலிப்பாடி ஊராட்சியில் ஒரு தனியார் திருமண மகாலில் ராயம்பேட்டை, கரிங்காலிகுப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் ஆணையாளர் எஸ்.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகிக்க சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடுசட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முகாமினை ஆய்வு செய்த அவர் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாற்றமும், 4 மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரு.4.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 பேருக்கு 100நாள் வேலை திட்டத்துக்கான அட்டையும் வேளாண்துறை சார்பில் 5பேருக்கு மினிகிட் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில்
மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் மக்களுக்கான திட்டங்களை எடுத்துக்கூறி மக்களுக்கான ஆட்சி தொடர்ந்திட இந்த அரசுக்கு என்றைக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த முகாமில் 12 துறைகள் மூலம் 47 சேவைகளுக்கான திட்டங்கள் மூலம் மக்கள் மனுக்கள் வழங்கி பயன்பெறலாம் 48 நாட்களுக்குள் மனுக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்றார்.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ஏழுமலை வேடநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி வருவாய் ஆய்வாளர் கோபால் கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர் செந்தில்குமார் உதவியாளர் ஆர்.காண்டீபன் உள்பட வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பொதுமக்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கே.சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.