கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம்..மாணவர்களை வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்!

Loading

திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவம், சட்டம் மற்றும் இதர கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம் செய்பவர்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழியனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவம், சட்டம் மற்றும் இதர கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கலந்துரையாடி வாழ்த்தி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

2025-26 ம் கல்வியாண்டில் கல்வித்துறையின் வாயிலாக 12ம் வகுப்பு பயிலும் தெரிவு செய்யப்பட்ட 102 அரசினர் மேல்நிலைப்பள்ளி 6972 மாணவ / மாணவியர்கள் கல்லூரிக்கு நேரடி களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.இக்களப்பயணம் மாணவ /மாணவியர்களுக்கு உயர் கல்வியினை தொடர ஆர்வமூட்டும் நிகழ்வாக அமைவதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற களப் பயணங்கள் தமிழ்நாட்டின் உயர்கல்வியை Gross Enrollment ratio கணிசமாக உயர்த்தி உள்ளது.

இக்கல்வியாண்டில் 09.10.2025, 10.10.2025, 13.10.2025, 14.10.2025 மற்றும் 15.10.2025 ஆகிய நாட்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு களப்பயணம் மேற்கொண்டு அவர்கள் காத்திருக்கும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ள உள்ளனர். 863 மாணவ / மாணவியர்களை கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) ம.மோகனா, உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த கல்வி திட்டம்) வி.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பவானி, பள்ளி துணை ஆய்வாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares