வாக்கு திருட்டுக்கு கண்டனம்..காங்கிரசார் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினர்!

Loading

கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்துகாங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.

ஒன்றிய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக கூறி அதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 13 14 15 வார்டு காங்கிரஸ் கட்சி கமிட்டி சார்பில் சுப்பிரமணியம் பாளையம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கோவை பச்சைமுத்து தலைமையில் பொதுமக்களிடம் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு 15 வது வார்டு மாமான்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து மற்றும் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வாக்கு திருட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியும் தங்களது கையெழுத்துக்களை இட்டும் பேரணியாக வந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் கடைகளில் உள்ளவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காட்சி நிர்வாகிகள் ஷேக் அப்துல் காதர், மவுனசாமி, சின்னு ராமகிருஷ்ணன், சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, நடராஜ் மற்றும் செந்தில்குமார், ரகுபதி, ரங்கசாமி, சதீஷ், சிவக்குமார், பழனிசாமி, கதிர்வேல், சுப்பிரமணியன், நஞ்சு குட்டி, சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர்,

 

0Shares