விவசாயம் செய்வதற்கு இடையூறு ..கிராம நிர்வாக அலுவலர் மீது விவசாயி புகார்!

Loading

திருவள்ளூர் அருகே விவசாயம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாஷிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கே முனிரத்தினம் (64) இவர் திருவள்ளூர் வட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த சேதுப்பாக்கம் ஊராட்சியில் 12 ஏக்கர் நிலங்களை பல்வேறு நபர்களிடமிருந்து கிரயமாக பெற்று 30 வருடங்களாக மூன்று பாகம் விவசாயம் செய்து வருகிறார். இந்த கிரயம் பெற்ற நிலத்திற்கான எஸ் எல் ஆர் எனப்படும் அரசு ஆவணம் முறையாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடவு நடும் போது தாமரைப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தங்கம் என்பவர் எந்த முகாந்திரமும் இல்லாமல் முன்னறிவிப்பு இல்லாமல் நடவு செய்யக்கூடாது என வாய்மொழியாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. எழுத்து மூலமாக தாருங்கள் என கேட்டதற்கு எழுத்துப்புறமாக தர அவசியம் இல்லை என மிரட்டுவதாகவும் கிரயம் வாங்கிய நிறத்தில் 30 ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது தாமரைப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி மிரட்டி வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி முனிரத்தினம் புகார் அளித்துள்ளார்.

இவரது நிலத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 120 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலையில் தனது நிலத்தில் மட்டும் நடவு செய்ய இடையூறு செய்வது ஏன் எனவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

0Shares